முடக்கத்தான் கீரை மூட்டுவலியை நீக்கும் 

மூட்டு வலியைப் போக்க ஒரு அருமருந்துதான் இந்த முடக்கத்தான் கீரை..

மூட்டு வலிக்கு முக்கிய காரணமே மூட்டுத் தேய்மானம்தான். இது வயதாக வயதாக அனைவருக்கும் உண்டாகும் நோய்தான்.. இதிலிருந்து தப்புவது என்பது பெரும்பாலானோருக்கு முடியாத ஒன்று. 
இளவயதிலேயே மூட்டுவலியா? அப்படியென்றால் நிச்சயம் நீங்கள் குண்டாக இருப்பீர்கள். அளவுக்கதிமாக வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பீர்கள். அல்லது காலுக்கு அழுத்தம் கொடுத்து செய்யக்கூடிய வேலைப் பார்ப்பவராக இருப்பீர்கள்..

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டு வேலை செய்பராக இருக்கக்கூடும். அதிக எடையை சுமக்கக்கூடிய வேலை செய்பவராக இருக்ககூடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மானத்தால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மூட்டுவலி வந்துவிடுகிறது.

மருத்துவரைப் பார்த்து, வைத்தியங்கள் செய்து கொண்டு வந்தால் அன்றைக்கு அல்லது ஓரிரு நாட்கள் வலி குறைந்ததுபோல இருக்கும். மருத்துவர்கள் இவர்களுக்கு கொடுப்பது வலி நிவாரணிகளைத்தான். இந்த வலி நிவாரணி மாத்திரைகள் என்ன செய்யும் தெரியுமா? வலியை மறத்துப்போகச் செய்யும். அதாவது வலி உணர்வை மட்டுமே போக்கும்..மாத்திரைகள் அனைத்தும் வலியைக் கட்டுப்படுத்தக்கூடியவை மட்டுமே.. அப்போதைக்கு குறைப்பது போலிருக்கும். ஆனால் அவை நிரந்தரமல்ல.. தொடர்ந்து மூட்டுவலியைக் கட்டுக்குள் கொண்டு வர தினமும் இந்த வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும் பக்கவிளைவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். இரத்தத்தில் மாத்திரையின் சாரம் குறையும்போது மீண்டும் பல்லவிதான்.. மூட்டுவலி.. மூட்டுவலி.. மேலும் மூட்டுவலி..

சிலருக்கு வலியைத் தாங்கக்கூடிய சக்தி இருக்கும். ஒரு சிலருக்கு உயிர்போகிற வலி இருக்கும்.. மூட்டுவலியால் இவர்கள் அவதிப்படும்போது காண சகிக்காது…

இதற்கு காரணம் மூட்டுகளில் தங்கும் கொழுப்பு, புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ் போன்ற படிகங்கள்தான்.

இத்தகைய துன்பம் தரும் மூட்டு வலியை நீக்க அருமையான இயற்கை முறை, இயற்கை மூலிகை உள்ளது.

முடக்கத்தான் கீரை:

பெயரே முடக்கத்தான் கீரை..அதாவது மூட்டுவலிகளை, உடல் வலிகளை முடக்கம் செய்துவிடும் குணம் உள்ளதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயரிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

கிராம்ப்புறங்களில் இக்கீரை அதிகமாக காணப்படும். வயல்வெளிகள், ஏரிக்கரைகள், கிணற்றடியில் என நீர்வளம் மிக்க எங்கும் இது காணப்படும்.

பயன்படுத்தும் முறை:

முடக்கத்தான் கீரையில் அனைத்துப் பகுதிகளையும் பயன்படுத்தலாம். முடக்கத்தான் கீரை, முடக்கத்தான் தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். இதை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு, இதனுடன் தேவையான இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சிறிய வெங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு வதக்கவும்.  வதங்கிய பிறகு அதில் இரண்டு குவளை நீர் விட்டு நன்றாக வேக வையுங்கள். நன்றாக கீரை வெந்த பிறகு கீரையின் சத்துகள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும். இப்போது அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய சாறை சிறிது சிறிதாக பருகலாம்.

முதலில் சாறை கொஞ்சமாக  எடுத்து பயன்படுத்தவேண்டும். ஒரு சிலருக்கு சேராமல் பேதியாகும். ஆனால் பேதியால் உடலுக்கு எந்த விட கெடுதியும் ஏற்படாது. இரண்டொரு நாளில் முடக்கத்தான் சாறு உங்கள் உடலுக்கு ஒத்துப்போய்விடும். பிறகு தினம்தோறும் இவ்வாறு சாறெடுத்து பருகலாம்.

வயதானர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து வயதினருடைய மூட்டுவலிகளை முடக்கத்தான் கீரை போக்கிவிடும். மூட்டு வலிகள் மட்டுமல்ல.. உடல், முதுகு தண்டுவடம், கை, கால் வலிகள் போன்ற அனைத்துவலிகளை முடக்கத்தான் போக்கிவிடும்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீங்க… “முடக்கத்தான் கீரை ‘மூட்டு வலி’யை முடக்கத்தான்” என்று.

Leave a comment